இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இன்னும் 3 ஆண்டுகளே கைவசம்: இலங்கையில் நாளை நடக்கப்போவது என்ன?

இலங்கையில் பொருளாதார ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் பொருளாதார ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

இந்நிலையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

” வங்குரோத்தடைந்திருந்த நாட்டில் பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதே எமது பிரதான இலக்காக இருந்தது. கடந்த ஈராண்டுக்குள் செய்துள்ளோம். எனவே, அடுத்த மூன்றாண்டுகளில் பொருளாதார அபிவிருத்தியே எமது இலக்காக உள்ளது. அதற்குரிய யோசனைகள் முன்வைக்கப்படும்.

பொருளாதாரம் ஸ்தீரம் என்பதால் அனைத்து வரிகளையும் உடன் நீக்கிவிட முடியாது. எனினும், சில நிவாரணங்களும் வழங்கப்படும். சில துறைகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படும். இவ்வாறு அனைத்து அம்சங்களும் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி 2026 நவம்பர் 12ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) முன்வைப்பார்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுது. நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது.

மேலும், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த தினத்தின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை