இந்தியா இலங்கை செய்தி

இந்திய சுகாதார அமைச்சர் கொழும்பு வருகை

இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா, நேற்று இலங்கை வந்தடைந்தார்.

இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா, நேற்று இலங்கை வந்தடைந்தார்.

பிம்ஸ்டெக் அமைப்பின் சுகாதார அமைச்சர்களின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அவர் கொழும்பு வந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) மற்றும் ‘கிழக்கு நோக்கிய செயல்பாடு’ (Act East) கொள்கைகளின் வழிகாட்டுதலின்படி, ஆரோக்கியமான, அதிக மீள்தன்மை கொண்ட மற்றும் வளமான பிம்ஸ்டெக் பிராந்தியத்தை உருவாக்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று அமைச்சர் ஜே. பி. நட்டா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நட்டாவின் இந்த பயணம், பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பொது சுகாதார முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், சிறிலங்கா மற்றும் பிற பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுடன் இந்தியாவின் சுகாதாரக் கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கும் ஒரு “முக்கியமான படியாகும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை