இந்தியா செய்தி

அமெரிக்க நீதிமன்ற வழக்கை நிராகரித்த இந்தியா

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் உளவு அமைப்பான 'றோ' (RAW) அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கை இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் உளவு அமைப்பான ‘றோ’ (RAW) அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கை இந்தியா நிராகரித்துள்ளது.

குறித்த வழக்கையும், இந்திய உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்றவை, தீய நோக்கம் கொண்டவை என இந்திய வெளிவிவகார அமைச்சு விமர்சித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், புதுடில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்திய உயர் அதிகாரிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள புனையப்பட்ட மற்றும் தீய நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், இத்தகைய ஆதாரமற்ற வழக்குகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் நீதிமன்ற ஆவணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கான கோரிக்கைகள், நாட்டின் நியமிக்கப்பட்ட மத்திய அதிகார அமைப்பான சட்டம் மற்றும் நீதி அமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பன்னூன் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் றோ அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணைகளை இந்திய நீதிமன்றங்கள் ஊடாக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நியூயோர்க்கில் தன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் இந்திய அதிகாரிகள் தொடர்புபட்டிருந்ததாக பன்னூன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவர் சிவில் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், குறித்த வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக வொஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்புவதற்கான நடைமுறை நடவடிக்கைகள், வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகப் பொருள்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை இந்தியா தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி