செய்தி விளையாட்டு

உலகின் முன்னணி 10 தடகள வீரர்களில் இலங்கையின் ருமேஷ் தரங்க

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆண் தடகள வீரர் தரவரிசையில் 8ஆவது இடத்தைப் பிடித்து இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆண் தடகள வீரர் தரவரிசையில் 8ஆவது இடத்தைப் பிடித்து இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இந்த ஆண்டு வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் அடிப்படையில், உலக தடகள சம்மேளனத்தின் (World Athletics) சிறந்த வீரர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 10 வீரர்களில் ருமேஷ் தரங்கவும் இடம்பெற்றுள்ளார்.

2026ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அவர், டயமண்ட் லீக் தொடரிலும் உலக தடகள அல்டிமேட் சம்பியன்ஷிப் போட்டியிலும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

அத்துடன், ரோமில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையையும் நிலைநாட்டினார். இதன் மூலம் ஆசியாவின் இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

உலகின் முன்னணி தடகள வீரர்களுக்கான பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளமை இலங்கை விளையாட்டுத்துறைக்கு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆண் மற்றும் பெண் தடகள வீரர்களை அறிவிக்கும் விருது விழா எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி மொனாக்கோவில் நடைபெறவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி