ஐரோப்பா

கனடா தலைமையிலான வங்கியில் சேர பிரித்தானியாவின் புதிய நிதிமைச்சர் ஜான் ஹீலி முனைப்பு

  • July 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சரான ஜான் ஹீலி (John Healey), பாதுகாப்புத் திட்டங்களுக்கு மலிவான நிதியுதவியைப் பெறுவதற்காக, கனடா தலைமையிலான உலகளாவிய வங்கித் திட்டத்தில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜான் ஹீலி பாதுகாப்புத் துறைக்குக் கூடுதலாக £18 பில்லியன் பவுண்ட்ஸை திரட்டும் சவாலை எதிர்கொள்கிறார். ஆகவே கனடா தலைமையிலான பாதுகாப்பு வங்கியில் சேர முனைப்புக் காட்டி வருகிறார். இதற்கு முன்னாள் டோரி பாதுகாப்புச் செயலாளர்களான சர் கேவின் வில்லியம்சன் (Sir Gavin Williamson ) […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஒருவழிப் பேருந்துக் கட்டணம்  02 பவுண்ட்ஸாக நிர்ணயம்

  • July 22, 2026
  • 0 Comments

ஜனவரி மாதம் முதல் இங்கிலாந்து முழுவதும் ஒருவழிப் பேருந்துக் கட்டணம்  02 பவுண்ட்ஸாக  நிர்ணயிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், மலிவு விலையில் போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதையும், மக்களுக்கு நிதி நிவாரணம் அளிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்த செலவு £500 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்போது £454 மில்லியன் நிதி ஆதரவு உள்ளது. மீதமுள்ள நிதி போக்குவரத்துத் துறையின் தற்போதைய பேருந்து நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெறப்படும் எனவும் […]

ஐரோப்பா

காட்டுத்தீ அபாயம் – நீராவி ரயில்களை இரத்து செய்தது பிரித்தானியா

  • July 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கிவந்த நீராவி ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த ரயில்கள் காட்டுத்தீயை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி பாட்டர் ரயில் என்று அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் ரயில்வேயின் ரயில் ஒன்று காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இந்த ஆண்டு 342 காட்டுத்தீ சம்பவங்களுக்குப் பதிலளித்துள்ளன. மேலும், இங்கிலாந்தில் தீவிர வானிலை நிகழ்வுகள் புதிய […]

ஐரோப்பா

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை பிரித்தானிய அரசாங்கம் இன்று கடுமையாக்கியுள்ளது. தேர்தல்களில் வெளிநாட்டுப் பணம் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளுக்கு அமைய இனிமேல், அரசியல் வேட்பாளர்கள், வேட்பாளராவதற்கு முன்பு பெற்ற £2,230 பவுண்ட்ஸுக்கு மேற்பட்ட நன்கொடைகளை அறிவிக்க வேண்டும் என்றும், வேட்பாளராவதற்கு முந்தைய நிதி ஆதாரங்கள் அனைத்தும் முறையான மூலங்களிலிருந்து வந்தவை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவான உரைகளையும் அறிக்கைகளையும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மீண்டும் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு

  • July 5, 2026
  • 0 Comments

அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றொரு வெப்ப அலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அசோரஸ் தீவுகள் முதல் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் வரை உயர் அழுத்த மண்டலம் உருவாகி வருகிறது. மேலும் வார இறுதிக்குள் பிரான்ஸ் மற்றும் தெற்கு பிரிட்டன் வெப்ப அலையை எதிர்கொள்ளும். வானிலை ஆய்வு மையத்தின்படி, இங்கிலாந்தில் ஜூன் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான மாதமாகவும், ஐக்கிய இராச்சியத்தைப் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 15 வயது சிறுவர்களின் மோசமான நடத்தை – இரு பெண்கள் பாதிப்பு

  • July 2, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இரு பதின்மவயதினருக்கு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த இரு சிறவுர்களும் ஹாம்ப்ஷயரில் உள்ள ஃபோர்டிங்பிரிட்ஜ் (Fordingbridge) என்ற இடத்தில் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை  படம்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்  குறித்த சிறுவர்களுக்கு சிறை அல்லாத மென்மையான தண்டனை வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு  பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு 10,000 சாரதிகளுக்கு அபராத புள்ளிகள்

  • July 1, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு இங்கிலாந்தில், சாலையில் ஓட்டுவதற்குப் பாதுகாப்பற்ற வாகனங்களை ஓட்டிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகள் பிடிபட்டுள்ளனர். சாரதி மற்றும் வாகன உரிம முகமையின் தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டப்பட்ட ஆய்வின்படி, பழுதடைந்த பிரேக்குகள், பழுதடைந்த டயர்கள், ஸ்டீயரிங் மற்றும் பிற தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ள வாகனங்களை ஓட்டியதற்காக 2025ம் ஆண்டில் 10,054 சாரதிகளுக்கு அபராதப் புள்ளிகள் வழங்கப்பட்டன. புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 3,055 குறைவாகும். இருப்பினும், வாகனங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டதாலா அல்லது சாலைகளில் போக்குவரத்து […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 80 பில்லியன் பவுண்ட்ஸாக உயர்த்த திட்டம்

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 2029 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கெயர்ஸ்டாமர் முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் 03 ஆம் உலகப் போர் குறித்த அச்சம் காரணமாக புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்டாமர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள திட்டங்களில்  முக்கியமான 05  வாக்குறுதிகள் வருமாறு, 01. பிரித்தானியாவின் ஆயுதப்படைகளில் ஏற்பட்டுள்ள வலுவிழப்பை மாற்றியமைக்க அவர் உறுதியளித்துள்ளார். 02. முன்னர் போதிய நிதி ஒதுக்கப்படாத பாதுகாப்புத் திட்டத்தை உருமாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.  (இது கடந்த […]

ஐரோப்பா செய்தி

வெப்ப அலை – பிரித்தானியாவில் நீரில் மூழ்கி 05 பேர் பலி!

  • June 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபத்திய வெப்ப அலையின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக  ஷ்ரூஸ்பரி பகுதியில் உள்ள செவர்ன் நதியில் இருந்து 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவரைத் தவிர, 15 வயதுடைய சிறுவர், 69 வயது முதியவர் மற்றும் 50 வயது நிரம்பிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வார நாட்களில் தடைப்படும் ரயில் சேவைகள்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அவசியமானால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தேம்ஸ்லிங்க் (Thameslink), கிரேட் நார்தர்ன் (Great Northern) மற்றும் சதர்ன் (Southern) சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் அவசியம் என்றால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேகக் கட்டுப்பாடுகள் காரணமாக, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சேவைகள் குறைக்கப்படும் […]