ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் பிரித்தானியா மீளவும் இணைய புதிய முன்மொழிவு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் மீண்டும் இணையலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு புதிய ன்மொழிவு, பிரதமர் ஆண்டி பர்னமிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி, பிரித்தானியா தனது ஆயுதப் படைகளையும் அணுசக்தித் தடுப்புப் பாதுகாப்பையும் ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, சுதந்திரமான நடமாட்டத்தை ஏற்காமலும் யூரோவில் சேராமலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தக மண்டலத்திற்கான அணுகலைப் பெறும். இந்த முன்மொழிவை முன்னாள் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் நிக் போலஸ் (Nick […]













