சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முற்பட்ட மூவர் உயிரிழப்பு
பிரான்ஸில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முற்பட்ட மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றடைக்கப்பட்ட படகில் பயணித்த 10 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் இன்று அறிவித்தனர்.
105 பேரை ஏற்றிச் சென்ற படகொன்று ஆபத்தில் இருப்பதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக பிரான்சின் கடல்சார் காவல் படை கூறியது.
இதனைத் தொடர்ந்து இந்த மரணங்கள் தொடர்பில் தெரியவந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கடத்தல்காரர்கள், ‘டாக்சி படகுகள்’ எனப்படும் படகுகளைப் பயன்படுத்தி ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை அமைதியான கடற்கரைகளில் இருந்து ஒரு சிறிய குழுவுடன் புறப்பட்டு, பின்னர் கடற்கரையோரமாகப் பயணித்து, மேலும் பலரை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திற்குள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாகக் கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 40 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காடப்பட்டுள்ளது.




