உலகம்

கலிபோர்னியாவை உலுக்கிய சோகம் – மகனுக்காக 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து தந்தை உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், மகனை காப்பாற்றுவதற்காக தந்தையொருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் அமைந்துள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் உள்ள மவுண்ட் பேடன் பவல் (Mount Baden-Powell) மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந் மகன் தவறி விழுந்த நிலையில், தந்தை அவரை காப்பாற்ற  500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மலையில் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி காரணமாக வழுக்கும் நிலையில் காணப்பட்டதாகவும், மகன் அதில் தவறி விழுந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மகனை காபாற்ற தன்தையும் நிலைதடுமாறு 500 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

உயிரிழந்தவர் கில்லர்மோ அலெஜான்ட்ரோ பட்ரெஸ் (Guillermo Alejandro Batres) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்பத்தின் ஏனைய நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 12,000 அமெரிக்க டொலர்களைத் திரட்டும் நிதி சேகரிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்