ஐரோப்பா

இராஜதந்திர விரிசல்களுக்கு மத்தியில் பிரித்தானியாவிற்கான புதிய தூதரை நியமிக்கும் ரஷ்யா

பிரித்தானியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்ற போதிலும் உரிய நேரத்தில் புதிய தூதரை அறிவிப்பதாக மொஸ்கோ கூறியுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்த ஆண்ட்ரி கெலின், கடந்த ஜுலை மாதம் பிரித்தானியாவில் இருந்து வெளியேறினார்.

உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒன்றாக லண்டன் இருப்பதால், இருநாட்டு உறவுகள் மோசமடைந்து வருகின்றன.

பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் விதமாக பிரித்தானியா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தப்போவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன் பிரித்தானியாவின் முக்கியநகரங்கள் ரஷ்யாவின் தாக்குதல் பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்