பிரித்தானியாவில் வீடொன்றில் தீவிபத்து – நால்வர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் மெர்சிசைடில் Merseyside உள்ள பூட்டில் Bootle என்ற இடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த தீவிபத்து தொடர்பில் அவசரக்கால சேவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் தலைமை அதிகாரி நிக் சியர்ல் Nick Searle, உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும், எட்டு தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குடியிருப்பாளர்களைத் தேடவும் தீயை அணைக்கவும் முயற்சி செய்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




