ஐரோப்பா

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத்தீ – தீயணைப்பு பணிகளில் சிக்கல்

  • July 11, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில், பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மேலும் பல கிராமங்கள் காலி செய்யப்பட்டு வருவதாக அவசரக்கால அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் 23 பேர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜிய நாட்டவர்கள் என்றும், தற்போது  12 பேருக்கான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தலூசியா […]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. செய்தி

திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

  • July 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாரளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், சிறிநாத், […]

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி, இசைக் குயில் எனப் போற்றப்படும் எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில் இன்று (11) காலமானார். செய்தி பொழுதுபோக்கு

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

  • July 11, 2026
  • 0 Comments

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில்  காலமானார். வயது மூப்பு காரணமாக இன்று அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட […]

விளையாட்டு

தென்னாப்பிரிக்க கால்பந்து நட்சத்திரம் ஜெய்டன் ஆடம்ஸ் 25 ஆவது வயதில் உயிரிழப்பு

  • July 11, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்க கால்பந்து வீரரான ஜெய்டன் ஆடம்ஸ் (Jayden Adams) தனது 25வது வயதில் உயிரிழந்தார். தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி (Gayton McKenzie), ஆடம்ஸின் மரணத்தை உறுதிப்படுத்தினார். தென்னாப்பிரிக்க கால்பந்து தனது மிகச் சிறந்த இளம் திறமையாளர்களில் ஒருவரை இழந்துவிட்டது,” என்று  அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. மத்திய கேப் டவுனின் புறநகர்ப் பகுதியான ஷாட்செக்லூஃபில் (Schotschekloof)  உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை    25 வயதுடைய  இளைஞரின் […]

உலகம்

கரையை கடக்கும் பாவி புயல் – சீனாவில் 18 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

  • July 11, 2026
  • 0 Comments

பாவி புயல் சீனாவின் வென்சோவை  (Wenzhou) மாநிலத்தை சுற்றி கரையை கடக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில் 18 இலடச்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த புயல் காரணமாக சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அத்துடன் காற்றின் வேகமானது மணிக்கு 144 கி.மீ (90 மைல்) வேகத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய வென்சோ அமைந்துள்ள ஜெஜியாங் (Zhejiang) மாகாணம் முழுவதும் 17 […]

ஐரோப்பா

பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் – இருவர் பலி

  • July 11, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கடுமையான தாக்குதலில், ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஆறு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கீவ், ஒடெசா மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனியப் படைகள் குறைந்தது இரண்டு குரூஸ் ஏவுகணைகளையும் 111 ட்ரோன்களையும் வெற்றிகரமாக இடைமறித்ததாக அறிவித்துள்ளன. ஆனால் வான் பாதுகாப்பு ஆயுதங்களின் கடுமையான பற்றாக்குறையால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன. ஒப்புக்கொள்ளப்பட்ட வான் […]

ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பழிவாங்கியே தீருவோம் – ஈரானின் புதிய உச்ச தலைவர் சபதம்

  • July 11, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். இது தொடர்பாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மொஜ்தபா கமேனியின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், “பழிவாங்குவது என்பது ஒட்டுமொத்த தேசத்தின் கோரிக்கையாகும்; அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “மறைந்த எமது தலைவர் மற்றும் இந்த இரு யுத்தங்களிலும் […]

ஐரோப்பா

சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பிரான்ஸ் – சுற்றுலாத் தலங்களை மூட தீர்மானம்

  • July 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை மற்றுமொரு வெப்ப அலை தாக்கியுள்ளமையால் பாரிஸின் ஈபிள் கோபுரம் மற்றும் லூவர் அருங்காட்சியகம் ஆகியவை இந்த வார இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் வெப்பநிலை உச்சம் தொடும் என கணிக்கப்பட்டுள்ளமையால் ஈபிள் கோபுரம் 04.00 மணிக்கு முன்னதாகவே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், லூவர் அருங்காட்சியகமும் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசி டி’ஓர்சே கலைக்கூடமும் (Musée d’Orsay) இன்று முதல் வரும் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் மூடப்படும் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை முன்னேற வேண்டுமெனில் இன ஐக்கியம் அவசியம் – பீரிஸ் கருத்து

  • July 11, 2026
  • 0 Comments

இலங்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமெனில் அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள், சர்வமத தலைவர்களை சந்தித்துவருகின்றனர். இதன்ஓர் அங்கமாக நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல – குறிப்பாக பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது கட்டாயமாகும். இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் எவ்வித பாகுபாடும் தற்போது […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – ஈரானுக்கு 24 மணிநேரம் கெடு

  • July 11, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், அனைத்து கப்பல் வழித்தடங்களும் சுங்கக் கட்டணமின்றி திறந்திருப்பதை உறுதி செய்யவும் ஈரான் 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. ஈரான் இணங்கத் தவறினால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தியை நேரடியாகவும் பிராந்திய மத்தியஸ்தர்கள் மூலமாகவும்  தெரிவித்துள்ளது. முன்னதாக ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதாகவும், அந்த நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படாது என்றும் அமெரிக்கா […]