நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் – நீதி அமைச்சர்
எதிர்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் சிறந்த […]













