ஐரோப்பா

சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பிரான்ஸ் – சுற்றுலாத் தலங்களை மூட தீர்மானம்

ஐரோப்பிய நாடுகளை மற்றுமொரு வெப்ப அலை தாக்கியுள்ளமையால் பாரிஸின் ஈபிள் கோபுரம் மற்றும் லூவர் அருங்காட்சியகம் ஆகியவை இந்த வார இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் வெப்பநிலை உச்சம் தொடும் என கணிக்கப்பட்டுள்ளமையால் ஈபிள் கோபுரம் 04.00 மணிக்கு முன்னதாகவே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், லூவர் அருங்காட்சியகமும் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியூசி டி’ஓர்சே கலைக்கூடமும் (Musée d’Orsay) இன்று முதல் வரும் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு பிரான்ஸ் முழுவதும் உள்ள 24 மாகாணங்களில் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்