ஐரோப்பா

பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் – இருவர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கடுமையான தாக்குதலில், ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஆறு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, கீவ், ஒடெசா மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனியப் படைகள் குறைந்தது இரண்டு குரூஸ் ஏவுகணைகளையும் 111 ட்ரோன்களையும் வெற்றிகரமாக இடைமறித்ததாக அறிவித்துள்ளன.

ஆனால் வான் பாதுகாப்பு ஆயுதங்களின் கடுமையான பற்றாக்குறையால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

ஒப்புக்கொள்ளப்பட்ட வான் பாதுகாப்புத் தொகுப்புகளை விரைவாக வழங்குமாறும், பேட்ரியாட் இடைமறிப்பு ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை விரைவில் வழங்க வேண்டும் எனவும் உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன்  இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ரஷ்ய இராணுவத்தின் தளவாடப் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் நோக்கில், அசோவ் கடலில் பயணித்த  21 எரிபொருள் டேங்கர் கப்பல்கள் மற்றும் ஏழு பிற கப்பல்களைத் தாக்கியதாக உக்ரைனின் ட்ரோன் படைகள் தெரிவித்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்