தென்னாப்பிரிக்க கால்பந்து நட்சத்திரம் ஜெய்டன் ஆடம்ஸ் 25 ஆவது வயதில் உயிரிழப்பு
தென்னாப்பிரிக்க கால்பந்து வீரரான ஜெய்டன் ஆடம்ஸ் (Jayden Adams) தனது 25வது வயதில் உயிரிழந்தார்.
தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி (Gayton McKenzie), ஆடம்ஸின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்க கால்பந்து தனது மிகச் சிறந்த இளம் திறமையாளர்களில் ஒருவரை இழந்துவிட்டது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
மத்திய கேப் டவுனின் புறநகர்ப் பகுதியான ஷாட்செக்லூஃபில் (Schotschekloof) உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை 25 வயதுடைய இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் உயிரிழந்தது ஜெய்டன் ஆடம்ஸ் என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




