ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – ஈரானுக்கு 24 மணிநேரம் கெடு
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், அனைத்து கப்பல் வழித்தடங்களும் சுங்கக் கட்டணமின்றி திறந்திருப்பதை உறுதி செய்யவும் ஈரான் 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
ஈரான் இணங்கத் தவறினால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் செய்தியை நேரடியாகவும் பிராந்திய மத்தியஸ்தர்கள் மூலமாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதாகவும், அந்த நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படாது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பில் வரும் நாட்களில் ஈரான் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




