” மாகாணங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து கொள்ளக்கூடாது.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

“மாகாண அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரைவார்க்க கூடாது”

  • July 19, 2026
  • 0 Comments

” மாகாணங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து கொள்ளக்கூடாது.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிஉச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய முறைமை மாற்றமே எமது அடிப்படைத் தீர்வாகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் தற்போது மாகாணங்களுக்குப் […]

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் "மறக்க முடியாத பாடங்களைக்" கற்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

  • July 19, 2026
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் “மறக்க முடியாத பாடங்களைக்” கற்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) எழுதிய அறிக்கை சனிக்கிழமையன்று அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் வாசித்துக் காட்டப்பட்டது. அதில், வாஷிங்டன் ஒப்பந்தத்தை மீறியதன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து “முற்றிலும் மதிப்பற்றது […]

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 3-வது இடத்திற்கான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

எம்பாப்பேயின் உலக சாதனை வீணானது: பிரான்ஸை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து

  • July 19, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 3-வது இடத்திற்கான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இரு அணிகளும் 2026 தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பெரும் எதிர்பார்ப்போடு களம் இறங்கின. ஆனால், அரையிறுதிப் போட்டிகளில் இரு அணிகளுமே ஏமாற்றத்தைச் சந்தித்தன. இங்கிலாந்து அணி அர்ஜென்டினாவிடம் […]

ஐரோப்பா

ஜெர்மனியின் ஆளும் கட்சிக்கு பின்னடைவு – முக்கிய உறுப்பினர் பதவி விலகல்

  • July 18, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் ஆளும் பழமைவாதக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn)இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் அவர் குழந்தை பெற்றதை அடுத்து பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பழமைவாதக் கட்சி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை தனது கொள்கைக்கு முரணாகக் கருதுகிறது. இதன்காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது, 46 வயதான ஸ்பான், அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் சகோதரக் […]

உலகம்

ட்ரம்பின் கருத்துக்களை உடனடியாக அறிய 01 கோடி ரூபாய் கட்டணம் அறவிட திட்டம்

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் தனது உண்மை தளத்தில் (Truth) பதிவிடும் செய்திகளை உடனடியாக பெற 01 கோடி ரூபாயை வசூலிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிடும் கருத்துக்கள் பங்குச் சந்தையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. உதாரணமாக, மற்ற நாடுகள் மீது விதித்த வரிகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்தது. அப்போது வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்த நேரத்தில் பங்குகளை […]

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பாதுகாப்பு அச்சுறுத்தல் அமைப்பாக பிரித்தானியா அறிவித்துள்ளமை நியாயமற்றது:பொறுப்பற்றது - என சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஈரான் வெளிவிவகார அமைச்சு. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

“புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் மீறிவிட்டது அமெரிக்கா”

  • July 18, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) தற்போதைய நிலை குறித்து வெளியிடு கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஹொர்முஸ் நீரிணையில் ஈரானிய அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தாமல், அதற்குப் “இணையான மாற்றுப் பாதை” (Parallel route) ஒன்றை பயன்படுத்துமாறு கப்பல்களை அமெரிக்கா வற்புறுத்தி […]

உலகம்

டெக்சாஸில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • July 18, 2026
  • 0 Comments

டெக்சாஸில்  கடுமையான வெள்ளத்தில் சிக்கிய சிறுமி ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வெள்ளத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட்டின் (Greg Abbott’) அலுவலகத்தால் பகிரப்பட்ட காணொளியில், அந்தச் சிறுமி மீட்கப்பட்டதும், அவரது குடும்பத்தினர் மற்றும் இரண்டு நாய்களும் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டதும் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே டெக்சாஸ் மலைப்பகுதி முழுவதும் பெய்த கனமழையால், ஆறுகள் பெருக்கெடுத்து   உயிருக்கு ஆபத்தானவையாக மாறியுள்ளன. மேற்படி வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான சாலைகளை அடித்துச் […]

இலங்கை

சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை பொலிஸ் மரியாதையுடன் நடத்த தீர்மானம்

  • July 18, 2026
  • 0 Comments

முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு.வூட்லர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் 20ஆம் திகதியன்று முழு பொலிஸ் மரியாதையுடன் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் உடல் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் இறுதிச் சடங்கு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (19) முதல் இறுதிச் […]

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் திரைக்கலைஞர்களைக் கெளரவித்து வருகின்றன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. செய்தி பொழுதுபோக்கு

தேசிய விருதுகளை வென்ற தமிழ்ப் படங்கள்

  • July 18, 2026
  • 0 Comments

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் திரைக்கலைஞர்களைக் கெளரவித்து வருகின்றன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் பல முக்கிய விருதுகளை அள்ளியுள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த இயக்குநர்: […]

உலகம்

பயண எச்சரிக்கை புதுப்பிப்பு – மத்தியக்கிழக்கில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

  • July 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் அமெரிக்கர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் திருத்தப்பட்ட பயண எச்சரிக்கையை வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது. அதில் “மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாகப் பதற்றம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன,” என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது அல்லது அதன் வழியாக வேறு நாடுகளுக்கு செல்வதை […]