ஐரோப்பா

கருங்கடலில் நிழல் கப்பற்படை கப்பல்களுக்கு குறி – ரஷ்யாவின் புதிய வியூகம்

ரஷ்யா தங்களின் “நிழல் கப்பற்படை” கப்பல்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வான்வழித் தாக்குதல் எதிர்ப்புப் படையினரைக் கொண்டு ஆயுதம் ஏந்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக  உக்ரைனின் ஆளில்லா அமைப்புப் படைகள் (USF),  கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களில் இயங்கி வந்த 147 ரஷ்யக் கப்பல்களைத் தாக்கியுள்ளன. நேற்று இரவு மேலும் ஆறு கப்பல்கள் தாக்கப்பட்டன.

உக்ரைனின் இந்த நடவடிக்கை காரணமாக ரஷ்யாவிற்கான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களின் கப்பல்கள் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ரஷ்யா இந்த புதிய யுக்தியை கையாளவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கமைய கப்பல்களில் ரஷ்யா குறைந்தபட்சம் மூன்று ஏவுகணை எதிர்ப்பு வீரர்களை நியமிக்கும் என்று உக்ரைனுக்கு உதவி வரும் “அதேஷ்” அமைப்பின் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, ​​ரூபிகான் ஆளில்லா விமான மையம், 51-வது வான் பாதுகாப்புப் பிரிவு மற்றும் 1096-வது வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைப் படைப்பிரிவு ஆகியவற்றிலிருந்து வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்