ஈரான் மீதான தாக்குதல்களுக்கு 13000 குண்டுகளை பயன்படுத்திய அமெரிக்கா
அமெரிக்கப் படைகள் ஆறாவது நாளாக ஈரான் மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சமீபத்திய உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 400ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாலங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஒரு ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமையால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா சமீபத்திய தாக்குதல்களில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்துள்ளது.
இதற்காக ஏறக்குறைய 13000 குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், தி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் பதிலடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




