ஐரோப்பா

உட்கட்சி பூசல்களை ஒழித்து தனித்துவமான பாதையில் பயணத்தை தொடர பர்ன்ஹாம் அழைப்பு

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு எனவும்,  புதிய அரசியலைக் கட்டமைப்பேன் என்றும் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் கடச்சியின் தலைவராக இன்று பொறுப்பேற்ற பர்ன்ஹாம் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இதுவரை காலமும் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கு நன்றிக் கூறினார்.

கட்சியை ஒன்றிணைத்து, உட்கட்சிப் பூசல்களை ஒழித்து, கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படும் கொள்கைகளிலிருந்து விலகி, “தொழிலாளர் கட்சிக்கே உரிய தனித்துவமான” ஒரு திசையை வழங்குவதன் மூலம் “ஒரு புதிய அரசியலைக் கட்டமைப்பேன்” என்று அவர் உறுதியளித்தார்.

அத்துடன் உட்கட்சிப் பூசல்களிலும், வெவ்வேறு திசைகளில் இழுப்பதிலும் நாம் மூழ்கியிருந்தால், பிரிட்டனின் புதிய வலதுசாரிகளை நம்மால் தோற்கடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து அதிகாரப் பரவலாக்கம் செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள “மறக்கப்பட்ட இடங்கள்” மற்றும் உழைக்கும் வர்க்க சமூகங்களின் தேவைகளைக் கவனிப்பதற்கும், அயராது பாடுபடுவேன் எனவும் அவர் கூறினார்.

ஒருவரால் இடப்பட்ட அடித்தளத்தின் மீது நான் கட்டியெழுப்பப் போகிறேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்