உலகம்

“விமர்சனத்தை நிறுத்துங்கள்” : ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

  • June 19, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நிர்வாகத்தின் அமைதி ஒப்பந்தத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ச்சியான எதிர்ப்பு அமெரிக்க இராணுவ உதவியைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே இஸ்ரேலுக்கு அனுதாபம் காட்டும் ஒரே நாட்டுத் தலைவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இஸ்ரேலின் தற்காப்பு ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜனாதிபதி ட்ரம்ப் […]

இலங்கை

தங்தக்தின் விலை 9000 ரூபாவால் சரிவு!

  • June 19, 2026
  • 0 Comments

உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட கணிசமான சரிவின் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை 9000 ரூபாயால் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று 24 காரட் பவுண் ஒன்றின் வலை 391,000 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று 382,000 காணப்படுகிறது. அதேபோல் 22 காரட் பவுண் ஒன்றின் விலை  359,700 இல் இருந்து 351,500 ஆக குறைந்துள்ளது. உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று US$ 4,138 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

லண்டன் புறப்பட தயாரான விமானத்தில் வெடிப்பு சம்பவம்

  • June 19, 2026
  • 0 Comments

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து நேற்றைய தினம் லண்டனுக்குப் புறப்படத் தயாராக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவரின் கையடக்க தொலைபேசி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி  குறித்த விமானம் அதன்  நிறுத்தத்திற்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 211 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய போக்குவரத்து அதிகாரிகள்  […]

கருத்து & பகுப்பாய்வு

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நெதன்யாகுவின் அரசியல் மரணத்திற்கான உரிமம்

  • June 19, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் நம்ப முடியவில்லை. இந்த சமாதான ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை எப்படித் தடுப்பது என்று அவர் தனது நெருங்கிய கூட்டாளிகளிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார், ஆனால் அவரது கூட்டாளிகளிடம்கூட பதில் இல்லை. ஜூன் 15 அன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தபோது, ​​நெதன்யாகுவின் தலையில் வானம் இடிந்து விழுந்தது. பெப்ரவரி […]

மெக்சிகோ நடுக்கள வீரர் லூயிஸ் ரோமோ, தனது அணியின் முதல் கோலை அடித்த பிறகு சக வீரரான எரிக் லிராவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். செய்தி விளையாட்டு

முதல் அணியாக knockouts சுற்றில் கால் பதித்தது மெக்சிக்கோ

  • June 19, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில், தென் கொரியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெக்சிகோ அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு knockouts தகுதி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் லூயிஸ் ரோமோ அடித்த கோல் மெக்சிகோவின் வெற்றியை உறுதி செய்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மெக்சிகோ கோல்கீப்பர் ரவுல் ரங்கெல் எதிரணியின் கோல் முயற்சிகளை மிகச்சிறப்பாக தடுத்தது அந்த அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இந்த […]

பிரித்தானியாவில் போலி திருமணச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பெருமளவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விசாரணை வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பா செய்தி

‘போலி திருமணம்’ மூலம் பிரித்தானியாவுக்குள் ஊடுருவல்- 9 பேர் கைது

  • June 19, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் போலி திருமணச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பெருமளவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விசாரணை வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி , ஆறு ஆண்டுகளாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்த மோசடி உளவு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பிரித்தானியா முழுவதும் உள்ள பல வீடுகளில் அதிரடிச் சோதனைகள் (Dawn Raids) நடத்தப்பட்டன.இதன்போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிறகு […]

அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர் உலகம் செய்தி

லெபனான் விவகாரம் – மாறுகிறது இஸ்ரேலின் மனநிலை

  • June 19, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர் Yechiel Leiter தெரிவித்துள்ளார். எனினும், தனது நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி கொடுக்கும் உரிமையை இஸ்ரேல் தன்வசம் வைத்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார். போர்நிறுத்தம் அனைத்து முனைகளிலும் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என்று ஒப்பந்தம் கூறினாலும், எல்லையில் இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லெபனானின் தெற்குப் பகுதியில் தனது படைகளைத் தக்கவைத்துக் கொள்ள இஸ்ரேலியப் பிரதமர் திட்டமிட்டுள்ளதால், […]

உலகம்

நைஜரில் விமான நிலையத்தை முற்றுகையிட்ட கிளர்ச்சி படையினர் – 35 பேர் பலி

  • June 19, 2026
  • 0 Comments

ஆப்பிரிக்காவின்   நைஜரில் உள்ள தியோரி ஹமானி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (18) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில்  35 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை தொடர்ந்து இரு தரப்பிற்கும் மோதல் வெடித்தது. இதில் 22 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக  நைஜரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் […]

இலங்கையின் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக உயர்ந்ததுடன், இறக்குமதிச் செலவுகள் அதிகரித்ததால் இலங்கை ரூபாயின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளானது இலங்கை செய்தி வணிகம்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முட்டுக்கட்டை

  • June 19, 2026
  • 0 Comments

ஈரான் போர்ச் சூழலால் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பலவீனமடைந்து, பணவீக்கம் அதிகரித்து, நிதி அபாயங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான Fitch Ratings எச்சரித்துள்ளது. இவ்வாறான தாக்கமானது பொருளாதார நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டு வரும் இலங்கைக்கு புதிய உலகளாவிய சவால்கள் உருவாகியுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடியின் நேரடித் தாக்கமாக எரிபொருள் விலை உயர்வு, பணவீக்க அதிகரிப்பு, நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் இறுக்கமான பணவியல் கொள்கை ஆகிய சவால்களை இலங்கை […]

இலங்கை

அர்ச்சுனாவுக்கு செருப்புமாலை

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் அன்றும், இன்றும், என்றும் மஹிந்தவே ஜனாதிபதி என்று கூறி சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தார். யாழ்ப்பாண மக்களால் சுயேட்சையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அர்ச்சுனா தற்போது மஹிந்த […]