உலகம்

லண்டன் புறப்பட தயாரான விமானத்தில் வெடிப்பு சம்பவம்

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து நேற்றைய தினம் லண்டனுக்குப் புறப்படத் தயாராக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவரின் கையடக்க தொலைபேசி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி  குறித்த விமானம் அதன்  நிறுத்தத்திற்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த 211 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய போக்குவரத்து அதிகாரிகள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் அவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதுகாப்பு சோதனைகளைத் தொடர்ந்து, லண்டன் செல்லும் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்தை விட சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்