நைஜரில் விமான நிலையத்தை முற்றுகையிட்ட கிளர்ச்சி படையினர் – 35 பேர் பலி
ஆப்பிரிக்காவின் நைஜரில் உள்ள தியோரி ஹமானி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (18) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது,
இதில் 35 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை தொடர்ந்து இரு தரப்பிற்கும் மோதல் வெடித்தது.
இதில் 22 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக நைஜரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் (JNIM) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான நைஜரில், ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்தில் நடக்கும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.




