ஒப்பந்தம் அல்லது சரணடைவது : இரண்டில் ஒன்றே வழி – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஈரான் தலைமைகள் தெரிவித்துள்ள நிலையில், ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று ஒரு உடன்பாட்டிற்கு வருவது, அல்லது முழுமையாக சரணடைவது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஈரான், பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என்றும், ஓமானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது தங்களுக்கு வலுவான கட்டுப்பாடு இருப்பதாக ஈரான் கூறினாலும், அது ஏற்கனவே அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும், கடுமையான கடற்படை முற்றுகையின் கீழும் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒரு உடன்பாடு அல்லது முழுமையான சரணடைதல் ஏற்படும் வரை ஈரானால் எதையும் சாதிக்க முடியாது. ஈரான் அதை ஏற்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பல தசாப்தங்களாக அவர்களே உருவாக்கிய ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் குறித்து நாம் பேசுகிறோம். இது மிகவும் எளிமையானது, ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.




