ஐரோப்பா

துருக்கியில் 04 ஆவது மாடியில் இருந்து விழுந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

துருக்கியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பர்சா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து அப் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணையில் உயிரிழந்தவர் சூடானை பிறப்பிடமாகக் கொண்ட 35 வயதுடையவர் எனவும், இறக்கும்போது அவர் 08 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவர் பர்சா நகரில் நான்காவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவருக்கு போதைப் பழக்கம் இருந்ததன் காரணமாக  அடிக்கடி சண்டையிட்டு வந்த அவர், இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்