இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவின் தலைவிதி செப்டம்பர் 22 இல் நிர்ணயம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதியை  நிர்ணயித்துள்ளது.

அதன்படி, இந்த மனுவை மேற்கொண்டு விசாரிப்பதா அல்லது ஆரம்பத்திலேயே நிராகரிப்பதா என்பது குறித்த உத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்கும்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தங்களது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தனர்.

இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை