ஐரோப்பா

நலத்திட்ட உதவிகளை பெற 03 ஆண்டுகளாக தாயின் பிரேதத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்த மகன்

தனது தாயின் நலத்திட்ட உதவிகளைக் பெற்றுக்கொள்வதற்காக அவரின் உடலை மூன்று ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 80,000 பவுண்ட்ஸை பெற்றுள்ளார்.

60 வயதான கிறிஸ்டோபர் பிலிப்ஸ், மார்ச் 2023 இல்  தனது 89 வயதான தாய் சில்வியா பிலிப்ஸ் இறந்த பிறகு,    ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக அவரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

மேலும், தனது தாயின் மரணத்திற்குப் பிறகு சுமார் £78,000 நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வூதியப் பணத்தைப் பெற்றதன் மூலம் செய்த மோசடியையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிலிப்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்