தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று கரை ஒதுங்கிய யாழ்.மீனவரின் சடலம் இலங்கை செய்தி

காணாமல்போன யாழ்.மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம், தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று (19) சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளது. நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி கடலுக்குச் சென்ற சமயம், எதிர்பாராதவிதமாகக் கடலில் தவறி விழுந்து காணாமல்போனார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கை […]

செம்மணியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர். இலங்கை செய்தி

நீதிகோரி செம்மணியில் மாபெரும் போராட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ – 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று மாலை நேரில் வருகை தரவுள்ளனர். அமைச்சரின் […]

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பேட்ரிக் ஹர்லி உலகம்

ஜப்பானில் பாடசாலையொன்றில் தீவிபத்து

  • June 19, 2026
  • 0 Comments

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் காயமடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாடசாலைக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து  300 மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அறிவிகக்ப்பட்டுள்ளது.

உலகம்

அமெரிக்க-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? வெளியான காரணம்

  • June 19, 2026
  • 0 Comments

லெபனான் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்ததன் காரணமாக, இன்று காலை நிலவரப்படி மேலும் 16 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இஸ்ரேலிய நடவடிக்கைகள் காரணமாக ஈரானிய தூதுக்குழுவால் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சக வட்டாரங்களின்படி, தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பாகிர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட முழுமையாகத் தயாராக இருந்தனர். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு காரணமாக, ஈரானிய தூதுக்குழுவின் பயணம் கடைசி […]

ஐரோப்பா செய்தி

ஈரான்மீதான தடையை நீக்கமுடியாது: பிரான்ஸ் திட்டவட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. லெபனானிலும் நிலையான அமைதியை ஏற்படுத்த தமது நாடு முயற்சித்துவருகின்றது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Noel Barrot தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தாலும் , இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்பதே பிரான்ஸின் கோரிக்கையாகும். அதேவேளை, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் […]

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பேட்ரிக் ஹர்லி ஐரோப்பா செய்தி

மாற்றத்துக்கு வழிவிடுங்கள்: பிரித்தானிய பிரதமரிடம் கோரிக்கை

  • June 19, 2026
  • 0 Comments

“புதிய மாற்றத்திற்கான சூழல் தற்போது தேவைப்படுகிறது” – என்று பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Patrick Hurley தெரிவித்துள்ளார். லேபர் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பிரதமர் Keir Starmer தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ” லேபர் கட்சியின் அரசியல் வரலாற்றில் கீர் ஸ்டார்மர் ஒரு மாபெரும் தலைவராக நினைவுகூரப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. […]

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும் , முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை செய்தி

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு புதிய படகுகள்

  • June 19, 2026
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நேற்று (19) நடைபெற்றது. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார். இதன்போது முதற்கட்டமாக   1.8 மில்லியன் ரூபா Rs. 1.8 million பெறுமதியான 32 வலைகளும், 8.64 மில்லியன் Rs. 8.64 […]

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் தீவிர விசாரணைஇடம்பெற்றுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

விசாரணை வேட்டை தொடரும் – NPP அரசு திட்டவட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு, “வங்குரோத்தடைந்துள்ள எதிரணி, அரசியல் நடத்துவதற்குரிய காரணிகளை தேடி அலைகின்றன. அண்மையில் கூடாரம் அமைத்து நாடகம் நடத்தப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் இருந்து கிளம்பிய எதிர்ப்பால் எதிரணிகள் பின்வாங்கின. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான […]

ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய. தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரி தலைவர். அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்குக்கு மாகாணசபை அவசியம்

  • June 19, 2026
  • 0 Comments

“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது.” இவ்வாறு ஐக்கிய சோசலிஷக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை. அதற்கான தேவைப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. தெற்கைவிடவும் வடக்கு, கிழக்குக்குதான் இது முக்கியம். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI இன் வளர்ச்சி – Apple தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

  • June 19, 2026
  • 0 Comments

மெமரி சிப்களின் விலை “தாங்க முடியாத அளவுக்கு” உயர்ந்துள்ளதால்,  Apple  நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் என்று  அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிம் குக்  எச்சரிக்கை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியே இந்த மெமரி சிப் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் 18 மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெமரி சிப்களின் விலை, குறிப்பாக […]