முதல் அணியாக knockouts சுற்றில் கால் பதித்தது மெக்சிக்கோ
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில், தென் கொரியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெக்சிகோ அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு knockouts தகுதி பெற்றுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் லூயிஸ் ரோமோ அடித்த கோல் மெக்சிகோவின் வெற்றியை உறுதி செய்தது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மெக்சிகோ கோல்கீப்பர் ரவுல் ரங்கெல் எதிரணியின் கோல் முயற்சிகளை மிகச்சிறப்பாக தடுத்தது அந்த அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் குழு A பிரிவில் முதலிடம் பிடித்த மெக்சிகோ, தனது அடுத்த நாக்-அவுட் knockouts சுற்றை சொந்த மண்ணிலேயே விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
தோல்வியுற்ற போதிலும் தென் கொரியா மூன்று புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
செக்கியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பிற்காக காத்திருக்கின்றன.
மெக்சிகோ அணி தனது அடுத்த கடைசி லீக் போட்டியில் செக்கியாவை எதிர்கொள்ளவுள்ளது. தென் கொரியா தனது அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.



