“விமர்சனத்தை நிறுத்துங்கள்” : ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
ட்ரம்ப் நிர்வாகத்தின் அமைதி ஒப்பந்தத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ச்சியான எதிர்ப்பு அமெரிக்க இராணுவ உதவியைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே இஸ்ரேலுக்கு அனுதாபம் காட்டும் ஒரே நாட்டுத் தலைவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இஸ்ரேலின் தற்காப்பு ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில் விமர்சித்ததையும், அவர் இல்லாமல் “இஸ்ரேல் இருந்திருக்காது” என்று கூறியதையும் தொடர்ந்து வான்ஸின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.





