உலகம் செய்தி

லெபனான் விவகாரம் – மாறுகிறது இஸ்ரேலின் மனநிலை

அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர் Yechiel Leiter தெரிவித்துள்ளார்.

எனினும், தனது நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி கொடுக்கும் உரிமையை இஸ்ரேல் தன்வசம் வைத்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்நிறுத்தம் அனைத்து முனைகளிலும் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என்று ஒப்பந்தம் கூறினாலும், எல்லையில் இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

லெபனானின் தெற்குப் பகுதியில் தனது படைகளைத் தக்கவைத்துக் கொள்ள இஸ்ரேலியப் பிரதமர் திட்டமிட்டுள்ளதால், இந்த அமைதி முயற்சிகளின் உறுதித்தன்மை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

தொடர்ந்து நிகழும் வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழப்பதும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இஸ்ரேல் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி