செய்தி

நாட்டின் சில பகுதிகளில் நீர்விநியோகத் தடை

கந்தான  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (04) பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

இதற்கமைய பின்வரும் பகுதிகளில் 05 தொடக்கம் 16 மணிநேரம் வரை நீர்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

01. மொரட்டுவ – காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (5 மணி நேரம்)

02. பாணந்துர– காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (5 மணி நேரம்)

03. பண்டாரகம – காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (12 மணி நேரம்)

04. ஹொரான – பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (5 மணி நேரம்)

05. கும்புக – பிற்பகல் 4.00 மணி மாலை 9.00 மணி வரை (5 மணி நேரம்)

06. இங்கிரியா – மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (5 மணி நேரம்)

07. பிலியந்தலா – நாளை (04) மாலை 4.00 மணி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 8.00 மணி வரை (16 மணி நேரம்)

மேலதிக தகவல்களுக்கு, NWSDB-யின் வாடிக்கையாளர் சேவை ஹாட்லைன் எண்ணான 1939-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி