இலங்கை செய்தி

மின்னல் தாக்கி இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்

வவுனியா, செக்கடிப்பிலவு பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா, செக்கடிப்பிலவு பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜோசப் அன்ரனி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் மேற்படி இளைஞர் அந்தப் பகுதியிலுள்ள மைதானத்தில் இருந்தவேளை, திடீரென மழை தீவிரமடைந்துள்ளது.

இதனால் அவர் அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கிய வேளையில், எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை