ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் லோகு பட்டியின் தம்பி சுட்டுக் கொலை
அஹுங்கல்ல, வெலிகண்டப் பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘லோகு பட்டி’ (Loku Patty) என்பவரின் தம்பி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று (01) இரவு சுமார் 8:10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 35 வயதான லந்துவாஹந்தி சுகத் நுவான் குமார டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




