உலகம்

லிபியாவில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – தாமதமாகும் கல்வி நடவடிக்கை

ஊதியம் மற்றும் பணிச்சூழல் தொடர்பான விவகாரங்களுக்காக லிபியாவில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்காரணமாக லிபியா முழுவதும் பாடசாலைகளின்  செயல்பாட்டைப் பாதிப்பதோடு, புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தையும் தாமதப்படுத்துகிறது.

செப்டம்பர் 13 அன்று ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

தலைநகர் திரிபோலியில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே அவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு வாரங்கள் தொடர்ந்த இந்த போராட்டம் தற்போது ,   நாடு தழுவிய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறைந்த ஊதியம் மற்றும் மோசமடைந்து வரும் பாடசாலைச் சூழல் ஆகியவை தங்களை இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டியதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

“இவை வெறும் கோரிக்கைகள் அல்ல, மாறாக உரிமைகள், உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும்,” என்று  ஆசிரியர் சங்கத்தின் தலைவர் முஸ்தபா அல்-பஹிலில் Mustafa Al-Bahilil, கூறினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்