உலகம்

நேபாளத்தில் பனிச்சரிவு – முகாம் அமைத்த 15 தொழிலாளர்கள் பலி

நேபாளத்தில் வெளிநாட்டு மலையேறுபவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டு வந்த மலை முகாம் ஒன்றை பனிச்சரிவு மூடியுள்ளது.

இதில் குறைந்தது 15 நேபாளத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மனங் மாவட்டத்தில் உள்ள 7,126 மீட்டர் (23,379 அடி) உயரமுள்ள ஹிம்லுங் ஹிமால் Himlung Himal  மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய மலை வழிகாட்டிகள் சங்கத்தின் (NNMGA) தலைவர் துல் சிங் குருங் Tul Singh தெரிவித்தார்.

மீட்கப்பட்ட உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்