ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலையின்மை விகிதம் (Unemployment Rate) எதிர்பாராத விதமாக 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. சந்தை வல்லுநர்கள் இந்த விகிதம் மாற்றமின்றி நிலையாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், இந்த திடீர் உயர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக நிறுவனங்கள் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், மத்திய வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்துவதைத் தவிர்க்கும் என […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

23 அமைச்சர்கள் பதவியேற்பு: 5 சதாப்தங்களுக்கு பிறகு காங்கிரசுக்கு அதிஷ்டம்!

  • May 21, 2026
  • 0 Comments

தமிழ் நாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா ஆரம்பமானது. விஜய் முதல்வராக பதவியேற்றபோதும் கூட முதலில் வந்தே மாதரம் பின்னர் தேசிய கீதம் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து என்று இசைக்கப்பட்டு அதற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியிலும் முதலில் வந்தே […]

இலங்கை செய்தி

வடக்குக்கான திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு!

  • May 21, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான […]

உலகம் செய்தி

ஈரானில் அசுர வேகத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • May 21, 2026
  • 0 Comments

ஈரானில் மேலும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீது குற்றவியல் குழுக்களை அமைத்தல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் மற்றும் படுகொலை முயற்சிகளை முன்னெடுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம், இந்த நபர்கள் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, […]

உலகம் செய்தி

அழுத்தங்களுக்கு அடிபணியோம்: ஈரான் ஜனாதிபதி கர்ஜனை!

  • May 21, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான மோதல்களைத் தவிர்க்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார். ஈரானை வற்புறுத்தல் மூலம் பணிய வைப்பது சாத்தியமற்றது என்று கூறிய அவர், அமைதிக்கான வழிகள் இன்னும் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், ஈரான் முன்மொழிந்த 14 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் நிர்வாகத்துடன் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஈரானியக் கப்பல்கள் மீதான தடைகளை நீக்க வேண்டும் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் 05 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவச பஸ் பயணம்

  • May 21, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் ஒகஸ்ட் மாதம் முதல், உள்ளூர் பஸ்களில் 05 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என நிதி அமைச்சர் அறிவிக்க உள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கருத்திற்கொண்டு, சுமார் £100 மில்லியன் மதிப்பிலான இந்த இலவசப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், தொழிற்கட்சி அரசாங்கம் பிஸ்கட் மற்றும் உலர்ந்த பழங்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான சுங்க வரிகளையும் தற்காலிகமாக நிறுத்தவுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க பல்பொருள் அங்காடிகளிடம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா ஆறு வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்

  • May 21, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஆறு வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. பஹ்ரைன், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளுடனேயே பிரித்தானியா இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வந்தால், பிரித்தானிய பொருளாதாரத்திற்கு சுமார் £3.7 பில்லியன் மதிப்பிலான பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆண்டுதோறும் சுமார் £580 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சுங்க வரிகள் நீக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், வளைகுடா […]

செய்தி விளையாட்டு

சென்னை அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

  • May 21, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 66 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய அணிகள் மோதவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். IPL சீசனில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து play-off சுற்றுக்கு முன்னேறி விட்டது. எனினும், கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளிகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட இருந்த நபர் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட இருந்த பிரஜையொருவரின் பயண அட்டை (டிக்கெட்) இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையே கையெழுத்தாகியுள்ள வன் இன் – வன் அவுட் ஒப்பந்தத்தின் கீழ் எரித்திரியா நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட இருந்தார். இந்நிலையில் அவர் பிரான்ஸிற்கு புறப்பட இருந்த இறுதி நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய குறிப்பிட்ட […]

செய்தி விளையாட்டு

play-off வாய்ப்பை தக்க வைத்ததது கொல்கத்தா அணி!

  • May 21, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் […]