உலகம்

ஜிம்பாப்வேயில் பயணிகள் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்

ஜிம்பாப்வேயின்  கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில் மேலும் 27 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட எழுபதிற்கும் மேற்பட்டோர் தீவொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில், 114 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் மட்டுமே படகில்  இருந்ததை உறுதிப்படுத்த முடிவதாக ஜிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்