ஐரோப்பா

ரஷ்யாவின் துறைமுக நகரம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்கில், உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 06 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பலர் காயமடைந்த நிலையில்,  அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாக மேயர் ஆண்ட்ரி கிராவ்சென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோலில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நகர ஆளுநர் மிகைல் ரஸ்வோஷாயேவ் (Mikhail Razvozhayev) குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் சில வீடுகள் சேதமடைந்தன, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேபோல், தென்கிழக்கு உக்ரைனிய நகரமான சபோரிஷியாவில் உள்ள  வணிக வளாகம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலால் ஸபோரிஷியாவில் சுமார் 1,200 நுகர்வோருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ஃபெடோரோவ் மேலும் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்