ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற 05 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைவு

சட்டப்பூர்வ குடியுரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்ப 05 நாடுகள் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளன.

இதற்கமைய குறித்த நாடுகள் ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்திட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகளே மேற்படி தீர்மானத்தை எட்டியுள்ளன.

இருப்பினும் திருப்பி அனுப்பும் மையங்களை அமைக்க எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

“திருப்பி அனுப்பும் மையங்களை நிறுவ வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை இந்த ஆண்டு மூன்றாம் நாடுகளுடன் எட்ட விரும்புகிறோம்,” என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் தெரிவித்துள்ளார்.

கோபன்ஹேகனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியுள்ள இந்தக் குழு, செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனியின் மியூனிக்கில் மீண்டும் கூடத் திட்டமிட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்