இலங்கை செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயு விலை குறைப்பு

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.

இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 815 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதுடன், அந்நிய செலாவணி மாற்று விகிதச் சவால்கள் நிலவியபோதிலும், 2026 செப்டம்பர் மாதத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்த விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை