கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர்விநியோகம் தாமதமாகும்
கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று (04) இரவு 8:00 மணி வரை அமலில் இருந்த நீர் விநியோகத் துண்டிப்பு, இன்று (04) இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் நுகேகொட, கொஹுவல, தெஹிவல, மவுண்ட் லவினியா, ரத்மலன, மொரட்டுவ, ராவத்தவத்த, சொய்சபுர, அங்குலன, இந்திபெத்த, கட்டுபெத்த, கல்தமுல்ல, மொதரா, கொரலவெல்ல, எகோடௌயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் தாமதமாகும்.




