சமாதானப் பேச்சுவார்த்தை – உக்ரைன் மற்றும் ரஷ்யா செல்லும் அமெரிக்க தூதர்கள்
போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்றுவரும் நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரத்தின் இறுதியில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமெரிக்க தூதர்கள் இன்றைய தினம் மொஸ்கோ செல்வார்கள் எனவும், நாளைய தினம் உக்ரைனுக்கு செல்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்தும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு இவ்விரு தூதர்களும் தலைமை தாங்குகின்றனர்.
இதற்கிடயே நேற்றைய தினம் கீவ்வில் உள்ள உக்ரைனின் பாதுகாப்புத் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடின் அலுவலகத்தை ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு போதுமான பதிலடி கொடுக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.




