ஐரோப்பா

பிரான்ஸ் – ஸ்பெயினுக்கு இடையிலான நட்புறவு ஒப்பந்தம் நிராகரிப்பு

ஸ்பெயின் செனட் சபை பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையிலான இரு தரப்பு நட்புறவு ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது.

இருப்பினும் இருநாட்டு ஜனாதிபதிகளும் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆதரிப்பதோடு, இடம்பெயர்வு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மொன்க்ளோவா Moncloa  அரண்மனையில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், இருநாட்டு ஒத்துழைப்பை செனட்சபை நிராகரித்தமைக்காக பெட்ரோ சான்செஸ் மன்னிப்பு கோரினார்.

தன்னுடைய பதவிக்காலம் முடிவதற்குள் இவ்வகையான ஒரு ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என்றும் உறுதியளித்தார்.

2023 ஜனவரியில் பார்சிலோனாவில் சான்செஸ் மற்றும் மக்ரோன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த நட்புறவு ஒப்பந்தம், ஏற்கனவே நாடாளுமன்றத்தின் கீழ்சபையால் அங்கீகரிக்கப்பட்டு, பிரான்சாலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், செவ்வாயன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், செனட் சபை இதற்கு எதிராக வாக்களித்தது. பிபி மற்றும் வோக்ஸ் கட்சிகளிலிருந்து 142 வாக்குகள் எதிராகவும், 106 வாக்குகள் ஆதரவாகவும், கிடைக்கப்பெற்ற நிலையில் ஒப்பந்தம் தோல்வியை தழுவியது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்