இலங்கை செய்தி

இனவாதம் பரப்பும் சஜித் அணி: ஆளுங்கட்சி குற்றச்சாட்டு

“சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி இனவாத கருத்தியலை விதைக்க முற்படுகின்றது. தமிழ் தலைவரான மனோ கணேசன் இனியும் இதற்கு துணை நிற்காமல் உடன் பதவி விலக வேண்டும்.”- என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் வலியுறுத்தினார்.

பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை முன்னிலைப்படுத்துகின்றது. இதனால் பெரும்பான்மை சமூகத்தக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, பெரும்பான்மை சமூகம் ஒன்றிணைய வேண்டும் என சஜித் அணி இனவாத கருத்தியலை போசித்துவருகின்றது.

இந்நிலையில் இனவாத கருத்துகளை முன்வைக்ககூடாது என சஜித் தரப்புடன் கூட்டணி வைத்துள்ள மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

மனோ கணேசன் பிரதிநிதித்துவப்படுத்தும் சஜித் தலைமையிலான அணி முழுமையாக இனவாதத்தை விதைக்க முற்படுகின்றது.

காவி உடையைக் காட்டி இனவாதத்தை தூண்ட எத்தனிக்கும் இந்த கும்பலுக்கு மனோ கணேசன் போன்ற மலையக தலைவர்கள் துணை நிற்பாரா?

தான் இருப்பது இனவாத அமைப்பு எனில் மனோ கணேசனுக்கு தற்போது புரிந்திருந்தால், அவரின் கூட்டணியை சார்ந்தோர் வெளியிட்ட இனவாதக் கருத்துகளை மீள பெறும்வரை தமது பதவியை மனோ கணேசன் பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லையேல் அவர்கள் கூறும் கருத்துக்கு மனோ மன்னிப்பு கோர வேண்டும்.” – என்றார் கிட்ணன் செல்வராஜ்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை