ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் மற்றுமொரு பாதுகாப்பு மீறல் சம்பவம்
ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் மற்றுமொரு பாதுகாப்பு மீறல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்று விமான நிலையத்தின் வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே அத்துமீறி பிரவேசித்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம், விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று இனங்காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற இராண்டாவது பாதுகாப்பு மீறலாக இது காணப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், ஆனால் மேலதிக சோதனைகளை மேற்கொள்வதாகவும் லைப்சிக் காவல்துறை முன்னதாகக் கூறியிருந்தது.




