ஸ்பெயினில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவர் கைது
ஸ்பெயினில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியான பாஸ்க் Basque பகுதியில் இன்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் மற்றும் 22 வயதுடைய பெண் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுள், பாதுகாப்புப் படைகள் குறித்த தகவல்களும், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பாஸ்க் பிராந்திய காவல்துறையான ‘எர்ட்செய்ன்ட்சா’ (Ertzaintza) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




