பிரான்ஸில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
பிரான்ஸில் வாழ்க்கை செலவு நெருக்கடியை கண்டித்து அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளன.
500000 மக்கள் வீதிகளில் இறங்கி 110 இடங்களில் போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த வேளையில், கருப்பு உடை அணிந்த சிலர் சொகுசு அங்காடிகளின் ஜன்னல்களை உடைத்தும், கடைகளைச் சூறையாடியும், பட்டாசுகளை வீசியும், குப்பைத் தொட்டிகள் மற்றும்பிர மிதிவண்டிகளுக்குத் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சில இடங்களில் பொலிஸார் மீது போராட்டக்கார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பதிலுக்கு பொலிஸாரும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சுமார் 1500 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் பாரிஸில் உள்ள பவுல்வர்டு மஜென்டா Boulevard Magenta வழியாக நடந்து சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உடனடியாக அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




