இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு – ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டாளியான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலுக்குள்ளிருந்தே எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மிகவும் வலிமையாகவும், துணிச்சலாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்தகைய கூட்டாளியையே அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படப் போட்டியிடும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, எனது முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




