இந்தியா செய்தி

டெல்லியில் போராட்டங்களால் ரூ.3,000 கோடி வர்த்தக இழப்பு

இந்தியத் தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சிஜேபி அமைப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சிஜேபி அமைப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக, இம்மாதத்தில் இதுவரை டெல்லி வர்த்தகர்களுக்கு சுமார் 3,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்களால் சுமார் 2,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும், ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வீதிகள் மூடப்பட்டமை மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டமை காரணமாக மேலும் 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதன் தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த இழப்புகளில் சில்லறை வர்த்தகத் துறைக்கு 1,800 கோடி ரூபாயும், மொத்த வியாபாரத் துறைக்கு 600 கோடி ரூபாயும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்களால் ஏற்படும் இடையூறுகள் தொடர்ந்து நீடித்தால், எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகைக்குள் மொத்த வர்த்தக இழப்பு 10,000 கோடி ரூபாயைத் தாண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மற்றும் சிபிடி மைதானங்கள் ஆகியவை போராட்டங்களுக்கான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லி வியாபாரிகள் மகாசங்கம், துணைநிலை ஆளுநர், காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில், ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் நிகழ்ச்சியை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராம்லீலா மைதானம், சதர் பஜார், சாந்தினி சௌக், காரி பாவ்லி மற்றும் சாவ்ரி பஜார் உள்ளிட்ட முக்கிய மொத்த வியாபாரச் சந்தைகளுக்கு அருகில் அமைந்துள்ளமையே தங்களின் கவலைக்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய சில வாரங்கள் விற்பனை மற்றும் பொருட்களின் விநியோகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். இந்த நேரத்தில் போராட்டங்கள் மற்றும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படுவது வியாபார நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி